அம்பாறை – 22 செப்டம்பர் 2025
Zee தமிழின் ‘சரி க ம ப’ மேடையில் அம்பாறை திருக்கோவில் சபேஷனுக்கு பெருமையான வாய்ப்பு
Zee தமிழ் தொலைக்காட்சி சேனலின் புகழ்பெற்ற “சரி க ம ப” நிகழ்ச்சியில், அம்பாறை திருக்கோவிலை சேர்ந்த சபேஷன் என்பவருக்கு சிறப்பான வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
SPB நினைவு சுற்றில், மறைந்த பாடல் மாமேதை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் 18 வருடங்களாக மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்திய ஒலிவாங்கியை முதல் போட்டியாளராக பயன்படுத்தும் பெருமை சபேஷனுக்கு வழங்கப்பட்டது.
இந்த அரிய வாய்ப்பு, சபேஷனின் இசை பயணத்தில் மறக்கமுடியாத மைல் கல்லாகும். அவரது திறமைக்கு ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்துக்கள் சபேஷன்!
Editor: கதிர்