சுண்ணாகம் பொலிஸாரின் அராஜகம் : பொன் சுதன் கண்டனம்!
யாழ் சுண்ணாகம் பகுதியில் பொலிஸாரால் இளம் தாய் தாக்கப்பட்டதுடன் அவரின் இரண்டு மாத குழந்தையும் பொலிஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ளசெய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியான விசாரணை மேற்கொண்டு குற்றத்தில் ஈடுபட்ட பொலிஸார் தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும் இதுபோன்ற காடைத்தனம் இனியும் தொடராமல் இருக்க உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் பகுதிகளில் இவ்வாறான அதிகார அராஜகம் மட்டும் குறைவதில்லை.
இந்த கொடூர சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் நாடாளுமன்ற தேர்தலில் ‘தண்ணீர் குழாய் சின்னத்தில் இலக்கம் 6 இல்’ போட்டியிடும் பொன் சுதன் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.