வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன் தீவு பிரதேசத்தில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி, கோழிக்கடை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நண்பர்களுடன் வெள்ள நீரில் நீச்சலாடியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.