காசோலை மோசடி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் மற்றும் அவரின் முன்னாள் செயலாளர் தினேஷ் ஆகியோர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
காணி ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுத்தரவும் கூறி 20 லட்சம் ரூபாய் காசோலை மோசடி தொடர்பில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.