கொழும்பு – ஜூலை 28:
கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 9 மாணவிகள் 5 பேர், போதை மாத்திரைகளை உட்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பாடசாலை நிர்வாகத்திலும் பெற்றோர்களிடையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
—
♀️ அதிரடி நடவடிக்கை:
மாணவிகள் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டதை கவனித்த பாடசாலை அதிபர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் பாடசாலைக்கு சென்ற மருதானை பொலிஸார், குறித்த மாணவிகளை கைது செய்து, விசாரணை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
—
விநியோகஸ்தர் கைது:
விசாரணைகளின் போது, மாணவிகளுக்கு போதை மாத்திரைகளை வழங்கியதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 2 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவர் எப்படி மாணவிகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார்? போதைப்பொருள் விற்பனைக்கான பின்னணி என்ன? என்பது குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.