பிரான்ஸில் அபயா நிரந்தர தடை: உறுதி செய்தது அரசு!
பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்த தடையினை மீண்டும் ஒருதடவை அரச ஆலோசனை சபை (Conseil d’État) உறுதி செய்துள்ளது.
association La Voix lycéenne 6 தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றும் sud-Education எனும் ஆசிரியர் தொழிற்சங்கம் ஒன்றும் இணைந்து மேற்கொண்டிருந்த கோரிக்கை ஒன்றை Conseil d’État நிராகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற கூட்டத்தில் மேற்படி கோரிக்கையை நிராகரித்து, அபாயா பாடசாலைகளில் அணிவது தடைவிதிக்கப்பட்ட ஒன்றாகும், அதனை பரிசீலிக்க எதுவும் இல்லை எனவும் தெரிவித்து சபையினர் நிராகரித்தனர்.
“தேசிய கல்வி அமைச்சகம் விதித்த இந்த தடையினால் எந்த பாரதூரமான விளைவுகளும் இருப்பதாக தெரியவில்லை. பாடசாலைகளில் கறுப்பு நிறத்திலான முழு ஆடை அணிவது முழுமையான மத அடையாளத்தை பிரதிபலிப்பதாகவும், பாடசாலைகளில் அவற்றுக்கான அவசியம் எதுவும் இல்லை!” என சபையினர் மேலும் தெரிவித்தனர்.