நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட விமானப் படையின் ஆளில்லா விமானம் தியவன்னா ஓயாவில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த ஆளில்லா விமானம் விபத்திற்குள்ளானதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
விமானத்தை கண்டுபிடிப்பதற்காக கடற்படையின் சுழியோடிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.