கதிரையில் இருந்து தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு! – முழங்காவிலில் சோகம்!
கதிரையில் இருந்து இறங்க முயன்ற ஒரு வயது ஆண் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் முழங்காவில் வைத்தியசாலை வீதியில் இன்று மதியம் நடந்துள்ளது.
குழந்தையைக் கதிரையில் இருத்திவிட்டுத் தாய் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது கரையில் இருந்து இறங்க முயன்ற குழந்தை தவறிக் கீழே வீழ்ந்துள்ளது. குழந்தையின் தலையின் பின்பகுதி தரையில் பலமாக அடிப்பட்டுள்ளது.
சுயநினைவை இழந்த குழந்தை உடனடியாக முழங்காவில் வைத்தியயசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆயினும் குழந்தை முன்னரே உயிரிழந்து விட்டது என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
குழந்தையின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கான கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.