ஜெய் ஸ்ரீ ராம் எனும் பிரிவினைவாத கூச்சலுக்கு எதிர்க் குரல்களான ஜெய் பீம், அல்லாஹு அக்பர் என்பவை சமூக நீதிக் குரல்களே என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களை மதத்தின் பெயரால் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எனவும் இந்துக்களை சாதியின் பெயரால் மேல்சாதி, கீழ்சாதி எனவும் பிளவுபடுத்துவதே பாஜக சங்பரிவாரின் பிரித்தாளும் சூழ்ச்சியாக உள்ளது.
ஆனால் கொஞ்சமும் கூச்சமின்றி மோடி அண்டப்புளுகை அள்ளி வீசுகிறார், எதிர்க்கட்சியினர் மீது பழி சுமத்துகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களையும் பிளவுபடுத்தி மோதவிடும் சங்பரிவார் கும்பல் நாட்டை நாசகார பாதையில் இட்டுச் செல்கிறது.
இவர்களின் ஜெய் ஸ்ரீ ராம் எனும் பிரிவினைவாத கூச்சலுக்கு எதிர்க் குரல்களான ஜெய் பீம், அல்லாஹு அக்பர் என்பவை சமூக நீதிக் குரல்களே என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகிறார்.பள்ளி, கல்லூரி மாணவர்களையும் பிளவுபடுத்தி மோதவிடும் சங்பரிவார் கும்பல் நாட்டை நாசகாரப் பாதையில் இட்டுச் செல்கிறது.
இவர்களின் ஜெய்ஸ்ரீராம் என்னும் பிரிவினைவாதக் கூச்சலுக்கு எதிர்க்குரல்கள் #ஜெய்பீம் #அல்லாஹூ_அக்பர்.
இவை சமூகநீதிக் குரல்களே!— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 9, 2022