இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் மியோன் லீ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் நல்லுறவைப் பேணிவருகின்றமைக்கு அந்த நாட்டின் தூதுவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நன்றி தெரிவித்தார் என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தென் கொரிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு வழங்கியுள்ள வேலைவாய்ப்புக்கான ஒதுக்கீட்டை, மேலும் அதிகரிக்குமாறு அந்த நாட்டின் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.