ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜப்பானின் ஆளுங்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் விலக இருப்பதாக ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டது.
டோக்கியோவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாகவும் கட்சிக்கும், கட்சியின் புதிய தலைவருக்கும் முழு ஆதரவு அளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.