முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று முற்றுகை செய்யப்பட்டது. நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
அதற்கமையவே முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வந்த நிலையில் குறித்த கசிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டது.
அதன்போது கசிப்பு, கசிப்புக் காய்ச்சப் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன மீட்க்கப்பட்டுள்ளன. அத்துடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் கைது செய்யப்பட்ட நபரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.