தேதி: 27 ஆகஸ்ட் 2025
இடம்: கொழும்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமக்கு எதிராக மொத்தம் 14 வழக்குகள் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், “எங்கள்மீது தவறு இருப்பதாக ஆதாரங்கள் இருந்தால், வழக்குகளைத் தாக்குங்கள். அதனை சந்திக்கத் தயார்” என்று சவால் விட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் மூலம், அவர் இப்போது “ஹீரோவாக” மாறியுள்ளார்.
நாட்டின் அனைத்துப் பொதுமக்களிடமும் பேசப்படும் ஒரு வீரரின் நிலைக்கு ரணில் உயர்ந்துள்ளதாகவும், அதற்கான வாய்ப்பை தற்போதைய அரசு தானே வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ரணில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தினரைப் பற்றிய விவாதங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனக்கெதிராக பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தாலும், “அவற்றால் எதையும் செய்ய முடியவில்லை” என்று மகிந்த ராஜபக்ச வலியுறுத்தினார்.
—
✍️ Editor: கதிர்