பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஏற்கனவே அனுர குமார திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் நேற்று COPE குழுவிலிருந்து விலகியுள்ளனர்.
COPE குழுவின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன செயற்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர் எனக் குறிப்பிடப்படுகின்றது.