யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடானது இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் பண்பாடு்ம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று (21.03.2024) காலை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா கலந்து கொண்டுள்ளதுடன் 54 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது இந்து பண்பாட்டுக்காக உழைக்கும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டில் இந்த ஆய்வு மாநாடு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.