முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பாடசாலை மாணவர்கள் கதறி அழுத சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிலே இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் இடமாற்றம் காரணமாக பாடசாலையை விட்டு பிரிந்து செல்லும் போது அவரின் பிரிவை தாங்காது மாணவர்கள் கண்ணீரால் வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.