அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத ஏனைய தகுதியுடைய பாடசாலை மாணவர்களுக்கும் தலா 6,000 ரூபாவை வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.
இதன்படி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்ய 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்குமாறு கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையிலே, ஏனைய மாணவர்களுக்கும் குறித்த உதவித்தொகையினை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.