2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிகொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு ஆரம்பமானது.
முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன.
ஆட்டத்தின் தொடக்கத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி, 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெங்களூரு அணி பெற்று சென்னை அணிக்கு நிர்ணயிர்த்திருந்தது.
அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் (35), விராத் கோஹ்லி (21) ஆகிய இருவரும் 27 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், பவ் டு ப்ளெசிஸ், ராஜாத் பட்டிடார் (0), அதிரடி நாயகன் க்ளென் மெக்ஸ்வெல் (0) ஆகிய மூவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
அவர்களைத் தொடர்ந்து கோஹ்லி, கெமரன் க்றீன் (18) ஆகிய இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
ஆனால், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 95 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.
அனுஜ் ராவத் 25 பந்துகளில் 48 ஓட்டங்களுடனும் தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 36 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 18.4 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்து தனது முதலாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
ஆரம்பம் முதல் அதிரடியில் இறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் சார்பாக புதிய அணித் தலைவர் ருத்துராஜ் ய்க்வாட், ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 24 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
n`ய்க்வாட் 15 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் 7ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் மொத்த எண்ணிக்கை 71 ஓட்டங்களாக இருந்தபோது ரவிந்த்ரா 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அஜின்கியா ரஹானே 27 ஓட்டங்களுடனும் டெரில் மிச்செல் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (110 – 4)
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷிவம் டுபே, ரவிதந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்bல் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னையின் வெற்றியை உறுதிசெய்தனர்.
ஷிவம் டுபே 34 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 25 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் கெமரன் க்றீன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.