இசை உலகில் தன்னை வளர்த்து விட்ட சாரங்கா இசைக்குழுவை கில்மிஷா மறந்து விட்டதாக தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. கில்மிசா முதன் முதலாக மூன்று வயதில் யாழ். அரசியலை சரஸ்வதி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” என்ற பாடலை பாடி இசை உலகில் கில்மிஷா காலடி எடுத்து வைத்தார்.
அப்போது அவர் பங்கு பற்றிய இசை நிகழ்ச்சிக்கு சாரங்கா இசைக்குழுவின் பானு மற்றும் சானு ஆகியோர் பின்னணி இசையை வழங்கியிருந்தனர். 3 வயதில் கில்மிஷாவின் பாடல் திறமையை பார்த்த சாரங்கா இசைக்குழுவின் இயக்குனர் ஆர்.வி.வாசன் தனது சாரங்கா இசைக்குழுவில் கில்மிஷா பாடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கினார்.
தொடர்ந்து சாரங்கா இசைக்குழுவில் தமிழ், சிங்கள, ஹிந்தி திரைப்பட பாடல்களை பாடவைத்து ஆர்.வி.வாசன் கில்மிஷாவை ஒரு சிறந்த மேடைப் பாடகியாக படிப்படியாக உருவாக்கினார். இந்நிலையில் zeetamil சரிகமப புகழ் ரமணியம்மா மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா உள்ளிட்ட zeetamil சரிகமg குழுவினர் பங்குபற்றிய இசைநிகழ்ச்சி இலங்கையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சாரங்கா இசைக்குழுவினர் பின்னணி இசையை வழங்கியிருந்தனர். குறித்தzeetamil சரிகமப குழுவினர் பங்குபற்றிய இசை நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கான சந்தர்ப்பத்தை சாரங்கா இசைக்குழுவினர் கில்மிஷாவுக்கு வழங்கியிருந்தனர்.
கில்மிஷாவின் பாடல் பாடும் திறமையை பார்த்த zeetamil தயாரிப்பாளர் விஜயகுமார் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா ஆகியோர் கில்மிஷாவுக்கு zeetamil சரிகமப நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை வழங்குவதாக அன்று வாக்குறுதி வழங்கியிருந்தார்கள். அதற்கமைய zeetamil இசை நிகழ்ச்சியில் கில்மிஷா கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்று வரலாற்று சாதனை புரிந்தார்.
கில்மிஷா zeetamil சரிகமபவில் சாதனை பெற்றதன் பிற்பாடு ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல் மற்றும் தனது முகநூல் பக்கத்தில் பல்வேறு தரப்பினருக்கு நன்றி தெரிவித்துள்ள போதும் தன்னை வளர்த்துவிட்ட சாரங்கா இசைக்குழுவினர் தொடர்பில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்காதது ஈழத்து இசைக் கலைஞர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் கில்மிஷாவின் வெற்றி தொடர்பில் சாரங்கா இசைக்குழுவினர் தமது வாழ்த்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.