யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தலையாழி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் என்ற 44 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மூச்செடுக்க சிரெமென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோதே நேற்று மாலை வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாக தீடிரென வெளியேறி சிறிது நேரத்தில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.