இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழும் குற்றவாளிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளி நாடுகளில் வாழும் குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர் கே.பி. மனதுங்க தெரிவித்தார்.
நாட்டில் குற்றச் செயல்களைச் சமாளிப்பதற்கான படிப்படியான செயல்முறையை நாங்கள் தொடங்கியுள்ளோம். வெளிநாடுகளில் இருக்கும் குற்றவாளிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.