மின்விசிறி விழுந்ததில் ஐந்தாம் தர மாணவர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி, அஸ்கிரியவில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் நேற்று(22) இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காயமடைந்த மாணவர்கள் இருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மாணவனின் கண்ணிலும் மற்றைய மாணவனின் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.