இலவச அம்புலன்ஸ் சேவையான சுவசெரிய 1990 நாடு முழுவதும் நேற்று மாலை 5 மணியிலிருந்து முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தச் சேவை முடங்கியுள்ளது. இந்த அம்புலன்ஸ் சேவையை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றே பெற்றுக்கொள்ள கூடிய நிலைமை நேற்று இரவு வரையில் நீடித்தது.
அத்தியாவசிய சேவையில் ஏற்பட்ட தடையால் மக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.