யாழில் அடிதடி: 22 பேர் வைத்தியசாலையில்!
யாழ்ப்பாணம் புறநகர்ப்பகுதியில் அடிதடியில் ஈடுபட்ட 22 பேர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தினார்.
நேற்றுமுன்தினம் மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரையிலான 5 மணி நேரத்தில் இவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குள்ளும் இவர்கள் கைகலப்பில் ஈடுபட முயன்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட நேரத்துக்குள் திடீரென அதிகளவானோர் சிகிச்சைக்காக வந்தமையால் மருத்துவர்களும் சிறிது நேரம் நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.