கொரோனாத் தொற்று சடுதியாக அதிகரிப்பு,
அதிதீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படுவோர் அதிகரிப்பு!
கொரோனாத் தொற்று சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப பிரிவு பணிப்பாளர் மற்றும் கொரோனா ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தொற்று 30 வீதத்தினாலும் மரணம் 10 வீதத்தினாலும் அதிகரித்துள்ளதாகவும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் 4முதல் 5 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் மூன்றில் இரண்டு வீதமானோர் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொள்ளாதவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு இதுவரை கொரோனாத் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 70 வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த எதிர்பாத்துள்ளதாகவும் அவ்வாறு தடுப்பூசியை மக்கள் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இயல்புவாழ்க்கையை கொண்டு செல்ல முடியும் எனவும் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.