இளம் கர்ப்பிணி பெண் பரிதாப மரணம்!
யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தினூடாக மோட்டார் சைக்கிளில் இருந்து பயணித்த கர்ப்பிணி பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு.
யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த கர்ப்பிணிபெண் ஒருவர் பொன்னாலை பாலத்தில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தரையில் தலை அடிபட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளம் கர்ப்பிணி பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.