புலம்பெயர் தமிழர்களால் சிக்கல் : பதறும் மைத்திரிபால சிறிசேன!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், அதனை அடிப்படையாகக்கொண்டு – இறுதிக் கட்டப் போர் தொடர்பிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சர்வதேச விசாரணை கோரலாம்.
எனவே, சர்வதேச விசாரணை அவசியமில்லை என ஐ.நா. பிரதிநிதியிடம் கூறிவிட்டேன். உள்ளக விசாரணைக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவி இருந்தால் போதும் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையே தேவையென்று வலியுறுத்திய மைத்திரி, அது தொடர்பில் ஐ.நா.வுக்கு கோரிக்கை முன்வைக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.