பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக சுயதொழில் திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொன் சுதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் மாதர் சங்கம் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுடனான சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எமது பகுதியில் உள்ளது. இந்த குடும்பங்களின் வாழ்வாதார நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் எமது மக்கள் பிரதிநிதிகளால் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக எந்த திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
தனி ஒருவனாக என்னால் முடிந்தவரை பல பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு சுயதொழில் திட்டத்திற்கு உதவி புரிந்துள்ளேன். இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்னை வெற்றிபெற செய்தால் மூன்று மாதங்களுக்குள் பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கான சுயதொழில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவேன் என்றார்.
பொன் சுதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ், கிளிநொச்சி மாவட்டத்தில் தண்ணீர் பைப் சின்னத்தில் 6ம் இலக்கத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.