எல்ல – வெல்லவாய வீதியில் பேருந்து விபத்து : 15 பேர் பலி
தேதி: 05 செப்டம்பர் 2025
இடம்: எல்ல – வெல்லவாய, இலங்கை
இலங்கையில் இன்னுமொரு கோர விபத்து சம்பவித்துள்ளதால் நாடு முழுவதும் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
எல்ல – வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காப்பாற்ற வந்தவர்களும் காயம்
விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற முனைந்த இருவரும், துரதிருஷ்டவசமாக சம்பவத்திலேயே காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் நன்றி
இந்த விபத்து அதிக இருள் சூழ்ந்த பகுதியில் இடம்பெற்றதாலும், மீட்பு குழுவினர் அங்கு செல்ல சிரமம் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில், அப்பகுதி மக்கள் தங்களது உயிரையே பணயம் வைத்து பேருந்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முன்வந்ததற்கு பொலிஸார் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 500 மீற்றர் பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
(விபத்தில் சிக்கியவர்கள் இறுதியாக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது)
மக்களின் தைரியமான மீட்பு
“இந்த இரவில் யாரால் சென்று காப்பாற்ற முடியும்?” என அதிகாரிகள் வினவியபோது,“நாங்கள் சென்று மீட்கிறோம்” என தைரியமாக கூறியுள்ளனர் பிரதேச மக்கள்.
அதன்படி, தோளிலே கயிறுகளை சுமந்து பல மணி நேரம் போராடிய மக்கள், சடலங்களை தங்கள் தோளில் சுமந்து மேலே கொண்டு வந்துள்ளனர்.
கைப்பேசி வெளிச்சத்தில் மீட்பு
மீட்பு குழுவினரால் சாத்தியமாகாத சூழலில், அப்பகுதி மக்கள் கையடக்க தொலைபேசி விளக்குகளைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
✍️ Editor: கதிர்