முல்லைத்தீவு – 15 செப்டம்பர் 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 வயது சிறுமி மீது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்ததாவது, கடந்த வாரம் முல்லைத்தீவு உடையார்கட்டு தெற்கு பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, குற்றச்சாட்டில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணைக்குப் பிறகு தடயவியல் பொலிஸாரின் அறிக்கையுடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.