கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட பகுதியில் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாவலன் பானுசா எனும் 18 வயதான மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம்(06) மாலை மாணவியை வீட்டில் காணாத நிலையில் தேடியபோது குறித்த மாணவி தோட்டக்கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சிவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.