காதல் விவகாரத்தால் சிறுமி உயிர் மாய்ப்பு மனமுடைந்து தந்தையும் உயிர் மாய்ப்பு!
காதல் விவகாரம் காரணமாக 17 வயதான சிறுமி தற்கொலை செய்ததை அடுத்து மனமுடைந்த தந்தையும் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவங்கேணி பகுதியில் இத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
நேற்று மாலை 17 வயதான சிறுமி நேற்று மாலை நஞ்சு அருந்தி உயிரிழந்துள்ளார். மகளின் பிரிவால் மனமுடைந்த தந்தையும் இன்று காலை வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் களுவங்கேணி அக்கரை வீதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் கிறிஷ்கா எனும் 17 வயதான சிறுமியும் சிறுமியின் தந்தையான முத்து கிருஷ்ணகுமார் (57) என்பவர்களே உயிர்மாய்த்துள்ளனர்.
சிறுமி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இளைஞன் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும் இதனை சிறுமியின் தந்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில் மனமுடைந்து நேற்று முன்தினம் மாலை நஞ்சு அருந்தி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. மகளின் இறப்பை தாங்கமுடியாமல் தந்தையும் நேற்று காலை தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.