சிறுமி ஆயிஷா படுகொலை! வெளியாகிய பிரேத பரிசோதனை அறிக்கை!
அட்டுளுகம பகுதியில் ஆயிஷா எனும் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
29 வயதான இளைஞன் ஒருவனே கைதுசெய்யப்பட்ட நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் குறித்த இளைஞன் சிறுமியின் உறவினர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி ஆயிஷா கொலை தொடர்பில் ஐந்து பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.