குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் மே மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“கடந்த ஆண்டு, 28 லட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கினோம். அதேபோல், 28 இலட்சம் குடும்பங்களுக்கு தலா பத்து கிலோகிராம் என இரண்டு தடவைகள் அரிசி வழங்கவுள்ளோம்.
ஏப்ரல் மாதம் புத்தாண்டுக்கு முன் 10 கிலோகிராம் அரிசி வழங்கப்படுவதுடன், மே மாதம் முதல் வாரத்தில் 10 கிலோகிராம் அரிசி வழங்கப்படும்.
இதேவேளை, அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.