ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தமை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு (Attorney General )அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் 6 மணித்தியாலங்களுக்கு மேலாக மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குமூலம் நேற்று திங்கட்கிழமை (25) பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தமக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி கண்டியில், மார்ச் 22ஆம் திகதியன்று தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்ததை அடுத்து மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டியில், நேற்று திங்கட்கிழமை (25) ஆஜரானார்
அதன்போது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.