அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான கொடுப்பனவில் 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதியானது, 1,410,064 பதிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வது குறித்தும் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.