குருவிட்ட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் பணியாற்றும் பெண் ஒருவரை பலாத்காரமாக கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது சந்தேக நபருடன் காணப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் சிரிபாகல காவல் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்றும், பிரதான சந்தேக நபர் இரத்தினபுரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் பிரதான சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.