நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்கு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மிதுனராஜா ரொபினா (28) எனும் கர்ப்பிணி பெண்ணே உயிரிழந்துள்ளார். குடும்பத்தகராறு காரணமாக தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார். தீக்காயங்களுடன் கடந்த 6ஆம் திகதி பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.