யாழ் வடமராட்சி வெற்றிலைக்கேணியில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசன் சிவஞானம் என்பவரே இரண்டு தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (11) கிளிநொச்சி நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.