2008ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐ.பி.எல் தொடர் ஆரம்பித்தது முதல் கடந்த சீசன் வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகவும், நடைபெற்று வரும் 17வது சீசனில் சி.எஸ்.கே வீரராகவும் தோனி விளையாடி வருகிறார்.
இதுவரையில் 251 போட்டிகளில் விளையாடிய தோனி இதுவரை 42 முறை ஸ்டம்பிங் முறையில் வீரர்களை ஆட்டமிழக்க செய்துள்ளார். கடந்த 22 ஆம் திகதி ஆட்டத்தில் பிடித்த 2 கேட்சுகளை சேர்த்து மொத்தம் 144 கேட்சுகளை பிடித்துள்ளார். அடுத்ததாக, ஐ.பி.எல் வரலாற்றில் அதிகமுறை ரன்அவுட் செய்து வீரர்களை ஆட்டமிழக்க செய்த வீரராகவும் தோனி சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரு அணியில் இருந்து சிறப்பாக விளையாடிய அனுஜ் ராவத்தை ரன்அவுட் செய்ததன் மூலம் இதுவரையில் 24 ரன் அவுட்களை தோனி நிகழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிகமுறை ரன்அவுட் செய்த வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.இதற்கு அடுத்த இடத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா 23 ரன்அவுட்களுடன் முதலிடத்தை பிடிக்கும் வரிசையில் உள்ளார்.
3ஆம் இடத்தில் பெங்களூரு அணி நட்சத்திர வீரர் விராட் கோலி 19 ரன் அவுட்களை நிகழ்த்தியுள்ளார். 4ஆம் இடத்தில் மணீஷ் பாண்டே மற்றும் CSK முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 16 ரன்அவுட்களை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.