வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
கிளிநொச்சி நகரப்பகுதியில் நேற்றையதினம் (26) இரவு 9.30 மணி அளவில் நிகழ்ந்த விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தரும் பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார்சைக்கிளில் பயனித்த குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த துரைராசா டிலக்சன் என்னும் 30 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். வாகன சாரதி கிளிநொச்சி பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.