இன்று(05) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வல்வெட்டித்துறை வல்வெட்டி- கருணாநிதி சனசமூக நிலையத்தில் வைக்கப்படவுள்ளது.
மாலை 4 மணிக்கு மன்னாருக்கு பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது. சாதனை வீரர் பியூஸ்லஸின் பூதவுடல் ஊர்வலத்தில் வடமாகாணத்தின் சகல கழகங்களின் வீரர்களும் தங்கள் கழகத்தின் சீருடையுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கவுள்ளனர்.
இரவு அவரது பிறந்த இடமான மன்னார் பனங் கட்டிக் கொட்டு, கிழக்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அஞ்சலி உரைகளுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இன்றைய தினம் தலைமன்னார் வீதியில் உள்ள மன்னார் புனித செபஸ்தியார் தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.