உலக வரைபடத்தில் இருந்து இலங்கை காணாமல் போகும்- சந்திரிக்கா!
மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர், நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று என்னால் கூற முடியாது, உலக வரைபடத்தில் இருந்து இலங்கை காணாமல் போகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில் தற்போதைய ஆட்சியால் நாடு சீரழிந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் சென்றுள்ளது. நாடு மீண்டெழ முடியாத நிலையில் உள்ளது. ஆட்சி மாற்றமே தற்போதைய உடனடித் தேவையாகும்.
எனவே நாட்டையும், மக்களையும், ஜனநாயகத்தையும் நேசிக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் நாட்டை மீட்டெடுக்க முடியும். இல்லையேல் உலக வரைபடத்தில் இலங்கை இல்லாமல் போகும் நிலைமைதான் ஏற்படும். அவ்வாறான நிலையில் நாடு உள்ளது. என தெரிவித்தார்.