சிறுமி கற்பம்! சிறிய தந்தை கைது!
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் 17 வயதான சிறுமி கற்பம் தரித்த நிலையில் சிறுமியின் சிறிய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரைப் பிரிந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தாயார் மத்திய கிழக்கு நாடொன்றிற்கு பணிக்காக சென்ற நிலையில் குறித்த சிறுமி உட்பட இரண்டு பிள்ளைகளும் சிறிய தந்தையின் பாதுகாப்பில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் 17 வயதான சிறுமி உடல் நலன் பாதிக்கப்பட்ட நிலையில் பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்திய பரிசோதனையில் சிறுமி கற்பமாக உள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து சிறிய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.