குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று ஐ.பி.எல். தொடரின் தனது 2ஆவது வெற்றியை பதிவு செய்தது.
நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இதில் நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பதிலுக்கு 207 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் சாகர், தேஷ் பாண்டே மற்றும் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பத்திரன மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.