தென்மராட்சியில் அதிகரிக்கும் உயிராபத்து. அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை!
தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களில் பலர் டெங்குத் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
15ஆம் திகதி வரை 12 பேருக்கு டெங்கு நோய் தாக்கம் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுவதுடன் தமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.