அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரியின் இல்லமெய்வல்லுநர் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி அதிபர் பாலமுருகன் தலைமையில் ஆரம்பமாகியது.
நிகழ்வின் ஆரம்பமாக விருந்தினர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின்னர் பாடசாலைக் கொடி கல்லூரி அதிபரால் ஏற்றப்பட்டு விளையாட்டுப்போட்டி ஆரம்பமாகியது.
அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாணவர்களின் அணிநடை ஆரம்பமாகியது. அதனைத்தொடர்ந்து ஓட்டம், கயிறு இழுத்தல், அஞ்சல் ஓட்டம், இடைவேளை நிகழ்வு என பல நிகழ்வுகள் நடைபெற்றன.
இறுதியாக வெற்றிபெற்ற இல்லத்திற்கு பிரதம விருந்தினரால் சம்பியன் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.