பொதுச் சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மத்துமகல ராகம பகுதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டை நடத்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களது முயற்சி தோல்வியடைந்த நிலையில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் பதிவாகியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.