உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தத் திட்டத்தில் திருப்திகரமான முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காகவும் பொருளாதார திருப்பத்திற்கான அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்காகவும் உலக வங்கியால் ஜூன் 28, 2023 அன்று அங்கீகரிக்கப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர்களின் இரண்டாவது தவணையை தற்போது உலக வங்கி விடுவித்துள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்கும், போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், அடிப்படையான சீர்திருத்தங்களை எளிதாக்குவதற்குமாகவே உலக வங்கி இவ் பட்ஜெட் ஆதரவை வழங்குகிறது.
அரசாங்கத்தின் திருப்திகரமான முன்னேற்றத்தை மதிப்பீடு செய்த பின்னரே இரண்டாவது தவணை வெளியிடப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் நடவடிக்கையானது உலக வங்கி ஐஎம்எவ், ஏடீபீ மற்றும் பிற கூட்டாளர்களுடன் கொண்டுள்ள ஒருங்கிணைப்பை வலியுறுத்துகிறது. இலங்கையின் முந்தைய ஏழு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகே ஜூன் 2023 இல் ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு வெளியிடப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.