ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் உணர்வுப்பூர்வமான உரையை ஆற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதில் தனக்கு விருப்பமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்த காமினி அத்துகோரளவின் சகோதரி ஆவார்.
அவர் 2004 இல் முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 2010, 2015 மற்றும் 2020 பொதுத் தேர்தல்களில், அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2020 இல், அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 45,105 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.